வெளுத்து வாங்கிய செபி!

மியூச்சுவல் ஃபண்ட், டெரிவேட்டிவ் டிரேடிங், கார்ப்பரேட் கவர்னன்ஸ்...விழிப்பு உணர்வு

சென்னை இன்டர்நேஷனல் சென்டர் அமைப்பு சமீப காலமாக  சென்னையில் உள்ள நிதி மற்றும் பொருளாதாரம் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் பங்கு மற்றும் கமாட்டி சந்தைகளின் கட்டுப்பாட்டு வாரியமான செபியின் முழுநேர  உறுப்பினராக இருக்கும் ஜி.மகாலிங்கத்தை அழைத்து வந்து பேச வைத்ததுடன், அவரிடம் பல கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்தது. இந்த நிகழ்ச்சியினைத் தொகுத்துத் தந்தார் நிதி நிபுணரான ஆர்.பாலகிருஷ்ணன்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசினார் மகாலிங்கம். ‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், இந்த லாபத்தில் ஒருபகுதியை முதலீட்டாளர்களுக்குத் தருகிறதா என்றால், இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் இன்றைக்கு உலக அளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் மிக அதிகமாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருந்தபோது, இந்த அளவுக்குக் கட்டணத்தை வசூலித்திருக்கலாம். ஆனால், இன்று எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.24 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இப்போதும் அதே அளவு அதிகமான கட்டணம்தான் வசூலிக்கப் படுவது எப்படி சரி? அதிக லாபம் பெறும்போது அதில் கொஞ்சத்தையாவது முதலீட்டாளர் களுக்குத் தரவேண்டாமா?’’ என்கிற கேள்வியை எழுப்பினார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick