ஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா?

யுள் காப்பீடு பாலிசிக்கு  கட்டிவரும் பிரீமியத் தொகைக்கு வருமான வரிவிலக்கு உண்டு.

கூடுதல் விவரங்களை ஆடிட்டர் கே.ஆர். சத்தியநாராயணன் விளக்கினார். “பாலிதாரர், ஆயுள் காப்பீடு பாலிசிக்கு செலுத்திய பிரீமியத் தொகைக்கு வருமான வரி விலக்கு பெறலாம். கட்டும் பிரீமியத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.  வருமான வரி செலுத்தும் நபர், அவர் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்து, அதற்கு பிரீமியம் கட்டியிருந்தால், அதற்கும் அவர் வருமான வரி விலக்கு பெறலாம். பிள்ளைகள் பெற்றோர் பெயரில் எடுக்கும் பாலிசிக்கு, பிள்ளைகளுக்கு வரிச் சலுகை கிடைக்காது” என்றவர் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயத்தைச் சொன்னார். ‘‘31.03.2012 -ம் ஆண்டுக்கு முன்பு ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்து, அந்த பாலிசியின் மொத்த காப்பீட்டு தொகையில் 20%-க்குக் குறைவாக ஒரு நிதியாண்டில் பிரீமியம் செலுத்தியிருந்தால், வருமான வரி விலக்குக் கிடைக்கும். அதேசமயம், பிரீமியத் தொகை 20 சதவிகிதத்தைத் தாண்டியிருந்தால் வரி விலக்கு கிடைக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick