வெற்றிகளைக் குவிக்கும் நயம்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெற்றிகளைக் குவிக்கும் நயம்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : The Power of Nice

ஆசிரியர்கள் : லிண்டா கப்லன் தலேர், ராபின் கோவல்

பதிப்பாளர் :
Crown Business


சிரித்த முகத்துடன் பிறருடன் நயமாகப் பேசி என்ன பிரயோஜனம்? முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டால், பிறர் நம்மைப் பார்த்துப் பயப்படுவார்கள் என்று நினைத்தால், அது தவறான எண்ணம் என்பதை நச்சென்று சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கும் புத்தகம். லிண்டா கப்லன் தலேர் மற்றும் ராபின் கோவல் எனும் இருவர் இணைந்து எழுதிய நயமாக (Nice) செயல்படுவதன் மூலம் உலகை வெல்வது எப்படி என்னும் புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

எங்களுடைய அலுவலக வாசலில் இருக்கும் செக்யூரிட்டி ஒருவர் பணியில் இருக்கும்போது வேலைக்கு வந்தால் அன்றைய நாள் இனிதாக அலுவலகத்தில் கழிவதைப்போன்ற எண்ணம் தோன்றும். ஏன் தெரியுமா?

வெறுமனே ஒரு இயந்திரத்தைப்போல் எங்கள் அடையாள அட்டையை மட்டும் பரிசோதித்து அனுமதிக்காமல் ‘‘ஹலோ லிண்டா, ஹலோ ராபின்’’ என்ற முகமலர்ச்சியுடன் வரவேற்று, ‘‘இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கட்டும்’’ என்று இன்முகத்துடன் வாழ்த்தி வரவேற்று உள்ளே அனுப்புவார். இது நாள்பட பழகிப்போக வேலைக்கு வரும்போது அவர் இருக்கிறாரா என்று எட்டிப் பார்க்கும் அளவுக்கு அனைவருக்குமே ஒரு ஆவல் வந்துவிட்டது. ஏன்? நாளின் ஆரம்பத்தில் ஒரு பாசிட்டிவ் டோன் (நல்லதோர் ஆரம்பத்தை) தருவதினால்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick