ஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்!

‘‘சென்னையில் காலை தொடங்கி வானம் ஒரே மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எனவே, மாலை ஆறு மணிக்கு எனக்கு போன் செய்யவும். செய்திகளை அப்போதே சொல்லிவிடுகிறேன்’’ என்று வெள்ளிக்கிழமை மதியமே நம் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் ஷேர்லக். மாலை ஆறு மணிக்கு அவருக்கு போன் செய்தோம். நாம் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இனி...

நால்கோ, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக டிவிடெண்ட் வழங்குகிறதே? 

‘‘மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனமான நால்கோ, 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,342 கோடியை நிகர லாபமாக  ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ஈட்டிய 669 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது இரு மடங்காகும். இதன் காரணமாக ரூ.5 மதிப்புக்கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.5.70 டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் இதுவரைக்கும் அளித்த டிவிடெண்டுகளில் இதுதான்  அதிகம்.  

இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ந்திருப்பதுடன், அதன் டேர்ன் ஓவரும் இதுவரை இல்லாத வகையில் ரூ.9,376 கோடியைத் தொட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 26% அதிகம். அதேபோல,  ஏற்றுமதி வருவாயும் 12% உயர்வுடன் 4.076 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.  நால்கோ உருவாக்கியுள்ள புதிய தொழில் திட்டமே இந்த வளர்ச்சிக்குக் காரணம்’’. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick