பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 2 - விற்பனை வேறு; மார்க்கெட்டிங் வேறு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிசினஸ்...ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

‘‘என்னிடம் ஸ்ட்ராங்கான மார்க்கெட்டிங் டீம் இருக்கு’’ - உறுதியான குரலில் சொன்னார் ப்ரகாஷ். ராஜ் மெஷின் டூல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்தான் ப்ரகாஷ். மருந்துத் தயாரிப்பு தொடர்பான இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது அவரது நிறுவனம்.

சமீபகாலமாக ப்ரகாஷின் நிறுவனத்தில் விற்பனை குறைந்து வருகிறது. இந்தக் காலாண்டு முழுக்கவே விற்பனை மந்தம்தான். அந்த இயந்திரம் வேண்டும், இந்த இயந்திரம் வேண்டும் என்று நிறைய பேர் கேட்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கும் பதிலைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், விற்பனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அது மட்டுமல்ல, கைக்கு வந்துசேர வேண்டிய பணமும் காலதாமதமானது. இதனால் நிறுவனத்தின் பண வரத்து (cash flow) குறைந்துவிடுமோ என்கிற பயம் வேறு ப்ரகாஷைக் கவலைக்குள்ளாக்கியது.

தன் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த இந்தப் பிரச்னையைத் தன் பிசினஸ் நண்பர்களிடம் சொன்னார் ப்ரகாஷ். தன்னைப் போல இருக்கும் பல பிசினஸ்மேன்கள் மாதமொருமுறை கூடி, பிசினஸில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துக் கலந்துரையாடுவது வழக்கம். ‘சவுண்டிங் போர்ட்’ என்று இந்தக் கூட்டத்துக்கு அவர்கள் பெயர் வைத்திருந்தனர்.

திரிலோக், கடந்த பல ஆண்டுகளாகவே இந்தக் குழுவின் உறுப்பினராக இருந்தவர், இன்று ஆலோசனை சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், ஒளிவுமறைவு இல்லாமல் உடைத்துப் பேசக் கூடியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick