முதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர் 2லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

டந்த இதழில், நமது வருமானத்தைக் கணக்கிட மேஜிக் நம்பர் ஏதும் உண்டா என்று கேட்டிருந்தேன். ஆம், அப்படியொரு மேஜிக் நம்பர் இருக்கவே செய்கிறது. அந்த நம்பர், முதலீட்டின்மூலம் கிடைக்கும் உண்மையான வருமானத்தின் அடிப்படையிலானது. உண்மையான வருவாயைப் புரிந்துகொள்ள, பணவீக்கம் (Inflation) என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது அவசியம்.

பொருள்களின் விலைவாசி ஏற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம். இன்று ஒரு பொருளின் விலை ரூ.100. அடுத்த ஆண்டு அந்தப் பொருளின் விலை ரூ.110 எனில், பணவீக்கம் 10% என்று அர்த்தம்.


இரண்டு வகைப் பணவீக்கம்

பணவீக்கத்தில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, மொத்த விலைப் பணவீக்கம். மற்றொன்று சில்லறைப் பணவீக்கம். இதில் சில்லறைப் பணவீக்கத்தை நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் என்றுகூட சொல்லலாம். நமது இந்தியக் குடும்பங்களில் தினசரி பயன்படுத்தப்படும் 460 பொருள்களின் விலை உயர்வு / இறக்கத்தின் அடிப்படையில் இந்த சில்லறைப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick