பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் தேவை!

ஹலோ வாசகர்களே..!

மது நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி (8.2%) குறித்து சில நாள்களுக்குமுன்பு வெளியான புள்ளிவிவரங்கள் நம்மிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. என்றாலும், இந்த முன்னேற்றம் இனிவரும் காலத்திலும் தொடருமா என்கிற கேள்வியும் எழவே செய்கிறது. நமது பொருளாதாரத்தின் மேற்புறம் மிக அழகாக இருந்தாலும், உள்ளே பல பிரச்னைகள் இருப்பதைப் பார்க்கும்போது நமக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நமது தொழில் துறை உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. பி.எம்.ஐ என்று சொல்லப்படக்கூடிய பர்ச்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் கடந்த மாதத்தைவிட 5% குறைந்துள்ளது. நமது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்குமான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதினால், நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது நாம் நிர்ணயித்த அளவைவிட அதிகமாகவே இருக்கும்.

வெளிநாடுகளிலிருந்து நாம் வாங்கியிருக்கும் கடனும் மிக அதிகமாக இருக்கிறது. ஏறக்குறைய 220 பில்லியன் டாலர் அளவுக்கு நமது குறுகிய காலக் கடன் இருக்கிறது. இது நமது டாலர் கையிருப்பில் ஏறக்குறைய பாதி. நம்மிடம் இருக்கும் வெளிநாட்டு கரன்சியின் கையிருப்பும் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது. 426 பில்லியன் டாலர் வைத்திருந்த நம்மிடம் இப்போது 403 பில்லியன் டாலர் மட்டுமே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick