இன்னொரு நிதி நெருக்கடி வருமா?

நிதி நெருக்கடி

மெரிக்காவில் ‌பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சரியாகப் பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தப் பொருளாதார நெருக்கடியின்  காரணமாக லேமென் பிரதர்ஸ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி திவால் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல வங்கிகள் திவாலாகி, அமெரிக்கப் பங்குச் சந்தை பலமாகச் சரிந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இருந்து மீள அமெரிக்க அரசாங்கமும், மத்திய வங்கியும் படாதபாடுபட வேண்டியிருந்தது. 

இந்தப் பொருளாதார நெருக்கடி முடிந்து பத்து ஆண்டுகளான  நிலையில், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதற்குச் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்விகளாக இருக்கிறது. காரணம், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வந்தால் அதன் பாதிப்புகள் மிகவும் கடுமையாக இருக்கும் என மெக்கென்ஸி நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஜேபி மார்கன் நிறுவனத்தின் உயரதிகாரியும் அடுத்தப் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், மீண்டும் ஒரு பொருளாதார‌ நெருக்கடிக்கான வாய்ப்பு இருக்கிறதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்