“ஒரு வேலையையாவது உருவாக்குங்கள்!” - ‘சுந்தரம் பாசனர்ஸ்’ சுரேஷ் கிருஷ்ணா வேண்டுகோள்

விருதுகள்

வின்கேர் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் இன்னோவேஷன் அவார்டு நிகழ்ச்சி தொழில் துறையினர் நடுவே வேகமாகப் பிரபல மடைந்து வருகிறது. கடந்த வாரம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சென்னையின் முக்கியத் தொழிலதிபர்கள் உள்பட பலரும் வந்திருந்தனர்.

ஐடியாக்களுக்கும் விருது

 “பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இன்னோவேஷன் விருது நிகழ்ச்சியில், புதுமையான தொழில் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு மட்டுமே விருது அளிக்கப்படும். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக, மிகச் சிறந்த புதுமையான தொழில் ஐடியாக்கள் (Great Innovative Ideas) வைத்திருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களில் மூன்று பேருக்கு விருது வழங்கி கெளரவிக்கிறோம்” என்றார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சி.கே.ரங்கநாதன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick