எதிலும் வெற்றி பெற வேண்டுமா? பலசாலியாக மாறுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: ஸ்ட்ராங்கர்: டெவலப் தி ரெசிலியன்ஸ் யு நீட் டு சக்ஸீட் (Stronger: Develop the Resilience You Need to Succeed)

ஆசிரியர்கள்: George Everly, Jr.Douglas Strouse, Dennis McCormack

பதிப்பகம்: AMACOM (சிறப்புப் பதிப்பு) 

போட்டி மிகுந்த இந்த உலகில் நீங்கள் ஜெயிக்க உங்களிடம் என்ன இருக்க வேண்டும்? பணம்...? நோ. அதிகாரம்...? நோ, நோ. வேறு என்னதான் வேண்டும்? நீங்கள் பலமானவராக இருக்க வேண்டும். எனவே, முதலில் உங்களைப் பலசாலியாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்கிற உண்மையை நச்சென்று நமக்குப் புரிய வைக்கிறது “ஸ்ட்ராங்கர்” என்கிற இந்தப் புத்தகம்.  இந்தப் புத்தகத்தை ஜார்ஜ் எவர்லி, டக்ளஸ் ஸ்ட்ரவுஸ், டெனிஸ் மெக்கோர்மே என்ற மூவர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

பலசாலியாக மாறுங்கள் என்று சொன்ன வுடன், நீங்கள் தண்டால் எடுக்கத் தேவை யில்லை. மனதளவில் நீங்கள் பலசாலிகளாக மாறினால் போதும். அதற்கான வழிகளை இந்தப் புத்தகத்தில் ஆசிரியர்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick