BIZ பாக்ஸ்

பெட்ரோல் விலையைக் குறைக்க மறுத்த அருண் ஜெட்லி!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணத அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசாங்கம் அதற்கு விதிக்கும் வரியைக் கொஞ்சம் குறைத்தால், பெட்ரோல் விலை குறையுமே என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், ‘‘வரியை எல்லாம் குறைக்க முடியாது’’ என்று சொல்லிவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அரசின் நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டில் 3.3 சத விகிதமாக இருக்க வேண்டும் என்பது இலக்கு. இந்த  நிலையில், வரியைக் குறைத் தால் அரசின் வருமானம் குறை யும் என்பதுதான் நிதி அமைச்சரின் கவலை. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாயைக் குறைத்தால், மத்திய அரசின் வருமானம் சுமார் ரூ.14,000 கோடி குறையுமாம். அம்மாடியோவ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்