‘ரான்பாக்ஸி’ சிங் சகோதரர்கள் மோதல்... நிஜமா, நாடகமா?

சர்ச்சை

த்து ஆண்டுகளுக்குமுன் ரான்பாக்ஸி நிறுவனத்தின் உரிமையை ஷிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் சகோதரர்கள், டாய்ச்சி எனும் ஜப்பானிய நிறுவனத்திற்கு 2.4 பில்லியன் டாலர் என்ற விலையில் விற்றபோது, சிங் சகோதரர்களை ஒட்டுமொத்த இந்தியாவே பெருமையுடன் அண்ணாந்து பார்த்தது. இந்திய கார்பரேட் உலகின் ஒரு வெற்றிகரமான டீலாக அன்றைய தேதியில் பார்க்கப்பட்ட ரான்பாக்ஸி கையகப்படுத்துதல் ஒப்பந்தம் பின்னாளில் எந்தளவுக்குப் பிரச்னைகளை உண்டு பண்ணப்போகிற தென்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

புதிய தலைமுறையின் நட்சத்திர இந்தியத் தொழிலதிபர்களாகப் பார்க்கப்பட்ட சிங் சகோதரர்கள், ரான்பாக்ஸி நிறுவன விற்பனையில் கிடைத்த தொகையின் உதவியுடன் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஏராளமான மருத்துவமனைகளில் ஃபோர்ட்டீஸ் நிறுவனத்தின் வாயிலாக முதலீடு செய்தனர். மேலும், நிதித் துறையிலும் கால்பதித்த சிங் சகோதரர்கள் ரெலிகேர் நிறுவனத்தின் நிர்வாக உரிமையினையும் கைப்பற்றினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick