ஷேர்லக்: ரிஸ்க்குக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா? | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: ரிஸ்க்குக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா?

காலையில் சொன்னதுபோலவே, மாலை சரியாக 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். அவருக்காகத் தயாராக வைத்திருந்த ஆப்பிள் ஜூஸைக் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்ச மாகப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

 ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட நிறுவனப் பட்டியலில் டி.சி.எஸ் இடம்பெற்றுள்ளதே?

“கடந்த ஆகஸ்ட் மாதம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மூலதனம்கொண்ட நிறுவனமாக உருவெடுத்த நிலையில்,  சமீபத்தில் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனமும் அதே பட்டியலில் சேர்ந்த இரண்டாவது இந்திய நிறுவனமாக இருக்கிறது. 

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின்  சரிவினால் பயனடைந்த மற்ற ஐ.டி நிறுவனங்களைப் போலவே, டி.சி.எஸ் நிறுவனமும் பயனடைந்தது. பங்கு ஒன்றின் விலை ரூ.2,100 என்ற அடிப்படையில் 7.61 கோடி பங்கு களைத் திரும்ப வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கி யுள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick