கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை! | Financial management tips for young adults - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சில விஷயங்கள் எதிர்காலத்தில் ‘நிச்சயமாக நடக்கும்’ என்று சிலர் நினைத்து, சில விஷயங்களை தடாலடியாக செய்துவிட்டு, பிற்பாடு அந்த விஷயங்கள் நடக்காமல் போகும்போது சிக்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரகுநாதன். அவர் சொல்வதைக் கேட்போம்...

“நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு 29 வயது. அரசுப் பணியில் இருக்கிறேன். பணியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளாகிறது. மொத்த சம்பளம் ரூ.32 ஆயிரம். பிடித்தங்கள் போக கையில் வாங்குவது ரூ.29 ஆயிரம். ஜி.பி.எஃப்-ல் இதுவரை ரூ.1.5 லட்சம் இருக்கக்கூடும். தற்போது ஜி.பி.எஃப்-ல் பிடித்தம் ரூ.2,800.

7-வது சம்பள கமிஷனுக்குப்பிறகு, எனது சம்பளம் ரூ.13 ஆயிரம் வரை அதிகரிக்கும் என நினைத்தேன். அந்த எண்ணத்தில்தான் சொந்த வீடு கட்டினேன். 2016-ல் வங்கியில் ரூ.13 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். இதற்கான இ.எம்.ஐ ரூ.13 ஆயிரம். 2031-ல் இந்தக் கடன் முடியும்.

ரூ.15 லட்சத்தில் வீட்டைக் கட்டி முடித்தேன். ரூ.2 லட்சம் வெளியில் கடன் வாங்கினேன். வெவ்வேறு செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் எல்லாம் சேர்த்து வெளிக் கடன் மட்டும் ரூ.5 லட்சம் உள்ளது. இதற்கு 36% வட்டியாக மாதம் ரூ.15 ஆயிரம் செலுத்தி வருகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick