ஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா?

நெருக்கடி

ங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்ட வணிகப் பத்திரங்கள் (Commercial paper) முதிர்வு நாளுக்குப்பிறகும் திரும்ப வழங்காததால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களுக்குச் சந்தையில், வணிகப் பத்திரம்மூலம் நிதி திரட்டக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப் பட்டிருக்கிறது.

இந்தச் செய்தி வெளியாகத் தொடங்கியவுடன் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாகக் குறையத் தொடங்கியது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்தப் பங்கின் விலை 62% குறைந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் இந்தப் பங்கின் விலை 37% குறைந்துள்ளது. ஐந்து மாதங்களுக்குமுன் இந்தப் பங்கின் விலை ரூ.57-ஆக இருந்தது, தற்போது வெறும் ரூ.14 என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

என்னவானது ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்துக்கு, ஏன் இந்த நிறுவனம் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது?

சுமார் 90 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ள ஐ.எல்&எஃப்.எஸ் குழுமம் பெற்றிருக்கும் மொத்தக் கடன் தொகை சுமார் ரூ.80,000 கோடிக்கு மேல்.  பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த நிறுவனம் கடன் வழங்கி யிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்தக் கடனைக் கொடுத்தது ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம். இப்படித் தந்த கடனானது திரும்ப வராமல் போக, வாங்கிய பணத்தைத் திருப்பித் தரமுடியாத சிக்கலில் மாட்டியிருக்கிறது ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick