வருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்? | Filing Revised Return of Income Tax - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்?

டாக்ஸ் ஃபைலிங்ஆடிட்டர் சதீஷ்குமார்

2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவர்கள், அதில் ஏதும் தவறு செய்திருந்தால், அந்தத் தவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கு 2019-ம் ஆண்டு மார்ச் வரை அவகாசம் உள்ளது. இதனால் தவறாகத் தாக்கல் செய்தவர்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.

2018, ஜூலை 31-ம் தேதி வரை 3.40 கோடி பேர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கான கெடு தேதி மேலும் ஒரு மாதக் காலம் அதாவது, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5.42 கோடியை எட்டியது. முந்தைய ஆண்டு 3.17 கோடி பேர் இந்தக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதனுடன் ஒப்பிட்டால், வரிக் கணக்கைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 72% அதிகரித்துள்ளது. இதில் ஏறக்குறைய 34.95 லட்சம் பேர், கெடு முடியும் நாளான ஆகஸ்ட் 31-ம் தேதியன்று வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick