ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

வேலைவாய்ப்பு

ந்தியாவின் வேலைவாய்ப்பினைப்  பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஐ.டி துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துவருகிறது. இப்படியான சூழலில்தான், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமேஷன் எனும் ரோபாட்டிக் தொழில்நுட்பம் துரித வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதன் எதிரொலியாக, இந்தத் துறையில் கணினி துறையில் வேலைவாய்ப்புகள் குறையும் என்கிற சந்தேகம் எழுந்தது. இனி, இந்த ஐ.டி. துறையின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று எல்லோரும் பயந்துகொண்டிருந்த சமயத்தில், இந்த நிதியாண்டிலும் ஐ.டி துறையில் 1 லட்சம் பேருக்குக் கூடுதலாக வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று நாஸ்காம் அறிவித்துள்ளது. இந்தத் துறையில் ஏற்கெனவே 39 லட்சத்து 7 ஆயிரம் பேர் இந்தியா முழுக்க பணியாற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு புள்ளிவிவரம், 2018-22-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியாவில் மட்டும் புதிதாக 1.31 கோடி வேலைவாய்ப்புகள், மொத்தம் 17 துறைகளில் கிடைக்க வாய்ப்புள்ள தாகத் தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்ப்புகளில் ஐ.டி துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன.

ஐ.டி துறையில் எத்தகைய பணிகளைச் செய்வதற்கான தேவை அதிகரிக்கும் என்பது முக்கியமான கேள்வி. தற்போதைய நிலையில்,  மெஷின் லேர்னிங் இன்ஜி னீயர், அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அனலிஸ்ட், டேட்டா சயன்டிஸ்ட், பேக்-என்ட் டெவலப்பர் போன்ற பணிகளைச் செய்வதற்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகளுக்கேற்ப தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வது ஐ.டி துறையில் பணியாற்ற விரும்புகிறவர் களுக்கான அடிப்படைத் தகுதியாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick