ஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு!

வாழ்க்கை

லிபாபா நிறுவனரும் தலைவருமான ஜாக் மா ராஜினாமா செய்திருப்பதுதான் கடந்த வாரத்தில் பிசினஸ் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி. அலிபாபா குழுமத்தின் தலைவராக இருக்கும் ஜாக் மா, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தலைவர் பொறுப்பிலிருந்து விலக இருக்கிறார்.

1999-ம் ஆண்டு ஜாக் மா மற்றும் இதர 17 நிறுவனர்கள் இணைந்து அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். 20 ஆண்டுகளில் அலிபாபா அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 42,000 கோடி டாலர்கள் என்னும் அளவில் இருக்கிறது. தனிப் பட்ட முறையில் 4,000 கோடி டாலர் சொத்து மதிப்பு ஜாக் மா வசம் இருக்கிறது. ஆனால், இவை எவை யும் ஜாக் மாவுக்குத் திருப்தியைத் தரவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick