பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 4 - நிறுவனத்தை பெரிதாக வளர்க்க ஆசை... ஆனால்..?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

ன்று ஞாயிற்றுக்கிழமை... லேசான மழை பெய்து, சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருந்தது. என்றாலும் ‘சவுண்டிங் போர்ட்’ உறுப்பினர்கள் எல்லோருமே அந்த ஸ்டார் ஹோட்டலில் பிசினஸ் மென்டார் திருலோக்கின் தலைமையில் கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தனது பிரச்னை பற்றி பேசினார் பாலாஜி.

‘‘நான் இப்போது செய்துவரும் பால் உற்பத்தி பிசினஸ் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘நீங்கள் பாலை வைத்து இன்னும் பல பொருள்களைச் செய்து விற்கலாமே! தயிர், பனீர் போன்ற பொருள்களை நீங்கள் தயார் செய்து தந்தால், எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாங்கத் தயார். எங்களுக்கும் தரமான பொருள் கிடைக்கும். உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்குமே’ என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால், எனக்கும் அதுமாதிரி செய்ய ஆசையாகத்தான் இருக்கிறது. சில பெரிய நிறுவனங்கள் இங்கிருந்து பால் வாங்கிக்கொண்டு போய், அதை பலவகையான உணவுப் பொருள்களாக மாற்றி, இங்கேயே கொண்டுவந்து விற்று, நல்ல லாபம் பார்க்கிறார்கள்.  வாடிக்கையாளர்கள் கேட்கிறபடி நான் இந்த பிசினஸை செய்யலாமா?’’ என்றார் பாலாஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick