கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 14 - நிம்மதி இழக்க வைத்த அவசரம்! | Financial management tips for young adults - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 14 - நிம்மதி இழக்க வைத்த அவசரம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சில இளைஞர்கள் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கும்போதே வாழ்க்கையின் அத்தனை வசதிகளையும் அனுபவித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன் காரணமாக அவசரமும் படுகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம் வாங்கும் இளைஞர்களைக் குறிவைத்து பல வங்கிகள் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கின்றன. வீட்டுக் கடன் வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனத் தொடர்ந்து வங்கிகள் தரப்பிலிருந்து அழைப்புகள் வரும்போது, நம் இளைஞர்கள் பலருக்கும் எல்லாவற்றையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்கிற ஆசை துளிர்விடுகிறது. அப்படி ஆசைப்பட்டு அகலக்கால் வைத்து அகப்பட்டுக் கொண்டவர்தான் கடலூரைச் சேர்ந்த சித்தார்த்.அவர் தனது நிலை குறித்துக் கவலையுடன் பேச ஆரம்பித்தார்.

“எனக்கு வயது 28. நான் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் நான்கு வருடங்களுக்குமுன் பணியில் சேர்ந்தேன். சம்பளம் ரூ.65 ஆயிரம். என்னுடன் பணிபுரிந்த சுமதியைக் காதலித்து, மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டேன். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால், யாரும் திருமணத்துக்கு வரவில்லை.

திருமணமான ஒரு சில மாதங்களில் சென்னைப் புறநகரில் சொந்தமாக ரூ.35 லட்சம் மதிப்பில் வீடு வாங்கிக் குடியேறினோம். அதற்காக வீட்டுக் கடன் ரூ.30 லட்சம் வாங்கினேன். அடுத்ததாக, ரூ.5 லட்சம் கார் கடன் வாங்கினேன். அதுமட்டுமல்லாமல், வீட்டுக்கு ஃபர்னிச்சர் மற்றும் பொருள்கள் வாங்க ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். ஆக,  இ.எம்.ஐ-ஆக மட்டும் மாதம் ரூ.37 ஆயிரம் செலுத்தி வருகிறேன். என் வருமானத்தில் இ.எம்.ஐ செலுத்தியதுபோக, குடும்பச் செலவுகளுக்கே சரியாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick