காபி கேன் இன்வெஸ்டிங் - 4 - தலைகீழாக மாற்றியமைக்கப்பட்ட பிராண்டுகள்... வெற்றிக்கான உளவியல் தந்திரங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடு

போட்டி என்பதே ஒருவர்மீது ஒருவர் தாக்குதல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக்கிக்கொண்டே செல்வதுதான். நீங்களும், நானும் எதிர்கொள்கைகள் கொண்ட கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்னைத் துஷ்டன் என்று சொன்னால், நான் உங்களைப் படுபாதக துஷ்டன் என்று சொல்வேன். அதற்குப்பின்பும் நீங்கள் என்னைத் திட்டும் பட்சத்தில், நான் உங்கள் பரம்பரையையே இழுத்துத் திட்டுவேன். நீங்கள் மட்டும் சும்மா இருப்பீர்களா? நீங்களும் என்னையும், என் பரம்பரையையும் கழுவிக் கழுவி ஊற்றுவீர்கள் இல்லையா?

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் மார்க்கெட்டிங் குருவான யங்மி மூன் (Youngme Moon) என்னும் பெண்மணி, மார்க்கெட்டிங் குறித்து எளிமையாக எழுதியுள்ள புத்தகத்தில் சொல்லியிருக்கும் வணிகரீதியான முன்னோடி களின் செயல்பாடும், அதனைப் பின்தொடர்ந்து செல்பவர்களின் நிலையையும் வரிசைக்கிரமமாகப் பார்ப்போம்.

1. ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்குப் புதியதொரு செளகர்யத்தை உருவாக்குகிறது. 2. வாடிக்கையாளர்கள் மகிழ்கின்றனர். 3. போட்டி யாளர்கள், முதல் நிறுவனம் வழங்கிய அந்த செளகர்யத்தை அவர்களைப் பின்பற்றி வழங்குவதற்கு முனைப்புடன் செயல்படுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick