வீட்டுக் கடனில் வாங்கிய வீட்டை விற்பது எப்படி?

கேள்வி - பதில்

வீட்டுக் கடனை அடைக்கப் பெரிதும் சிரமப்படுகிறேன். வீட்டை நல்ல விலைக்குக் கேட்கிறார்கள். விற்க என்ன நடைமுறை?

ரங்கநாதன், மெயில் வழியாக.

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்


“வீட்டை விற்க முதலில் ஒப்பந்தம் போட வேண்டும். அந்த வீட்டின் பெயரில் இருக்கும் வங்கிக் கடனைக் குறிப்பிட்டு, கட்டவேண்டிய மீதித் தொகையை வீட்டை வாங்குபவரே அடைப்பதற்கு ஒப்புக்கொள்வதையும், வீட்டைக் கைமாற்றிப் பதிவு செய்யும்போது கடனை அடைத்ததுபோக உள்ள தொகையைத் தருவதாக வும், அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும். பின்னர் இருவரும் வீட்டுக் கடன் வழங்கிய வங்கிக்குச் சென்று விவரத்தைக்கூறி, கடன் தொகையை செட்டில்மென்ட் செய்ய வேண்டும். பிறகு, வீட்டுப் பத்திரத்தை வங்கியிடமிருந்து பெற வேண்டும். மீதி தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பெயருக்கு வீட்டைப் பத்திரப்பதிவு செய்துதர வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick