வங்கிகள் இணைப்பு பலன் தருமா? | How beneficial is the merger of Banks? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வங்கிகள் இணைப்பு பலன் தருமா?

வங்கி

ந்திய வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய வங்கியொன்று உருவாக்கப்படும் எனக் கடந்த திங்களன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இந்த இணைப்பினால் உருவாகும் புதிய வங்கியானது எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய இரு பெரும் வங்கிகளுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக அமையும்.

இந்த வங்கி ஒருங்கிணைப்பானது சம்பந்தப்பட்ட வங்கிகளின் நிலைத் தன்மையை அதிகரிப்பதுடன், கடன் வழங்கும் வலுவினையும் உயர்த்தும் எனவும் மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம், புதிய வங்கி ஒருங்கிணைப்பு அறிவிப்புக்குப்பிறகு, ஒரே நாளில், மூன்று தேசிய வங்கிகளின் கூட்டுச் சந்தை மதிப்பானது 12% வரை சரிந்திருப்பது, பங்குச் சந்தையில் இந்த இணைப்பு குறித்து வேறுமாதிரியான எண்ணவோட்டங்கள் இருப்பதை உணர்த்துகிறது.

தற்போதைய சிக்கலான பொருளாதாரச் சூழ்நிலையில், மத்திய அரசின் அதிரடியான இந்த வங்கி இணைப்பின் சாதக, பாதகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick