ஈக்விட்டி ஃபண்ட்... நீண்ட காலத்தில் வருமானம் எப்படி இருக்கும்? | Interview with Janakiraman, Vice President of Franklin templeton India - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஈக்விட்டி ஃபண்ட்... நீண்ட காலத்தில் வருமானம் எப்படி இருக்கும்?

ஆர்.ஜானகிராமன், துணைத் தலைவர், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியாசிறப்புப் பேட்டி

சென்னையைத் தலைமையகமாகக்கொண்டு செயல்படும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்தது. இன்றைக்கு இந்த நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த முதலீட்டுத் தொகை, கடந்த ஜூன் மாத முடிவின்படி ரூ.1.04 லட்சம் கோடி. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் எட்டாவது இடத்தில் இருக்கிறது ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீட்டு மேலாண்மைத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆர்.ஜானகிராமன். இவர் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா ஏ.எம்.சி நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜர் ஆவார். இவர் நிர்வகித்து வரும் மூன்று ஈக்விட்டி ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. (பார்க்க, அட்டவணை) அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டி இனி...

“இந்தியாவின் மிகப் பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பின் சரிவும்.  இந்த இரண்டு பிரச்னைகளின் பாதிப்பு பங்குச் சந்தையில் எப்படி இருக்கும்?

‘‘கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் சரிவால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து, பணவீக்கமும் உயரும். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர, ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இதையொட்டி பங்குச் சந்தை கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகவே செய்யும். அதேநேரத்தில், நல்ல நிர்வாகத் திறன் கொண்ட நிறுவனங்கள் செலவினைக் குறைப்பது மற்றும் தங்கள் தொழிலில் இருக்கும் ரிஸ்க்கினைக் குறைப்பது போன்ற  நடவடிக்கைகளில் இறங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick