எளிதான பணப் பரிவர்த்தனைக்கு களம் அமைத்த கூகுள் பே! | Google Pay App for easy Mobile Payments - Nanayam Vikatan | நாணயம் விகடன்

எளிதான பணப் பரிவர்த்தனைக்கு களம் அமைத்த கூகுள் பே!

பணப் பரிவர்த்தனை

ந்தியாவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பிரபலமான போதும், ஆன்லைன்மூலமான பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு மக்கள் அவ்வளவாகப் பழகவில்லை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல்களை இணையதளங்களில் பதிவு செய்வதில்  மக்கள் தயக்கம் காட்டினார்கள். இதை ஒரே இரவில் மாற்றிய பெருமை பிரதமர் மோடியையே சாரும். அவர் அறிவித்த பணமதிப்பு நீக்கம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதற்குப்பிறகுதான் பேடிஎம், போன் பே, டெஸ் (Tez), மோபிக்விக் போன்ற தனியார் வேலட்டுகளின் விளம்பரங்கள் இந்தியப் பத்திரிகைகளிலும், பில்போர்டுகளிலும் அலங்கரிக்கத் தொடங்கின.

இந்திய அரசும் உடனே பணமில்லாப் பரிவர்த்தனைகளைச் செய்வதற் கான தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கத் தொடங்கின. யு.பி.ஐ (UPI) வசதி, பீம் ஆப் (Beem App), ஆதார் பே (Aadhaar Pay) எனப் பல்வேறு பெயர்களில் அரசின் புதிய வசதிகள் அவதாரமெடுத்தன. இன்னொருபுறம், தனியார் நிறுவனங்களும் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றன. அதில் ஒன்றுதான் கூகுள் டெஸ். தற்போது கூகுள் பே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick