ஃபண்ட் நிறுவனங்கள் மீது செபி அதிரடி... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

மியூச்சுவல் ஃபண்ட்வி.கோபால கிருஷ்ணன் நிறுவனர், மணி அவென்யூஸ்

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் கடந்த ஆகஸ்ட் மாத முடிவில் ரூ.25 லட்சம் கோடி என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளின் கட்டமைப்பு என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதால், முதலீடு அதிக அளவில் குவிந்து வருகிறது. இந்தத் துறையை நெறிப்படுத்தும் அமைப்பான செபி பல்வேறு காலகட்டங்களில் முதலீட்டாளர் நலன் கருதி, பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக சில நாள்களுக்குமுன் செபி, மியூச்சுவல் ஃபண்டு களின் மொத்தச் செலவு விகிதத்தைக் (Total Expense Ratio) குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ரூ.5,000 கோடி – ரூ.10,000 கோடிக்கு மேல் உள்ள ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மொத்தச் செலவு விகிதத்தை 1.75 சதவிகிதத்திலிருந்து 1.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது செபி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick