எஸ்.எம்.இ.கள் உற்சாகம்: சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசாங்கம்!

சிறு தொழில்

சிறு தொழில்களைச் செய்யும் தொழில் நிறுவனம் இந்தியாவில் அதிக அளவில் இருப்பது தமிழகத்தில்தான். சிறு தொழில்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தந்து, அந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு தயாராக இருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம். இந்த உற்சாகத்தைக் கடந்த வாரம் சென்னையில் சி.ஐ.ஐ அமைப்பு நடத்திய கருத்தரங்கில் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது.

 ‘எஸ்.எம்.இ  சி.இ.ஓ சம்மிட்’ என்கிற இந்தக் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்துப் பேசினார் சி.ஐ.ஐ-ன் தமிழகப் பிரிவின் தலைவரும், பொன்ப்யூர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி.

‘‘எஸ்.எம்.இ-களால் அதிக அளவில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரமுடியும் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உதவுகிறமாதிரி பல நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் எடுத்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்கவிருப்பதை யொட்டி சமீபத்தில் டெல்லி, மும்பையில் ‘ரோட் ஷோ’ நடத்தினோம். அதில் கலந்துகொண்ட வட இந்தியத் தொழிலதிபர்கள், தமிழகத்தில் புதிய முதலீடு செய்யவும், ஏற்கெனவே செய்துள்ள  முதலீட்டை அதிகரிக் கவும் முடிவு செய்துள்ளனர். மும்பையிலுள்ள ஒரு நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு செய்யத் தயார் என ‘ரோட் ஷோ’ முடிந்தவுடன் அறிவித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick