ட்விட்டர் சர்வே: இது காளைச் சந்தையா, கரடிச் சந்தையா?

ங்குச் சந்தைகள் இந்த வாரம் முழுக்கவுமே இறக்கத்தில் வர்த்தக மாகியுள்ளன. பங்குச் சந்தையானது கடந்த ஓராண்டில் நிஃப்டி 10.10%, இரண்டு ஆண்டுகளில் 27%, மூன்று ஆண்டுகளில் 39.70% வருமானம் தந்துள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் நிஃப்டி 3.20% அளவுக்கு இறக்கம் கண்டுள்ளது. அதாவது, வாரத்தின் ஆரம்பத்தில் நிஃப்டி 11455 புள்ளிகளாக இருந்தது, தற்போது 11143 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், சந்தையின் இன்றைய போக்கினை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நாணயம் ட்விட்டரில் ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டு பதில் சொன்ன முதலீட்டாளர்களில் 48% பேர், சந்தை இனி ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதலீட்டாளர்கள் இப்படி நினைப்பது ஆரோக்கியமான போக்கு என்றே சொல்ல வேண்டும். தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும்போது, காளைச் சந்தை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது போன்ற தோற்றத்தைத் தந்து, சந்தை 11000 புள்ளிகளுக்குக்கீழே சரிந்தாலும், மீண்டும் உயரும் என்கிற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick