ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... முதலீடு செய்ய சரியான நேரமா?

பங்குச் சந்தை

ங்குச் சந்தைகள் இறக்கத்தின் போக்கில் உள்ளன. கடந்த வாரத்தின் நான்கு நாள்களிலும் பங்குச் சந்தை இறக்கமே கண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதக் காலத்தில் சென்செக்ஸ் 3%, நிஃப்டி 2.70% இறக்கம் கண்டுள்ளன. பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் முடிந்துவிட்டது. இனி கரடிச் சந்தைதான் என்று  சிலர், சந்தை முதலீட்டாளர்களைப் பயமுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். ‘‘தற்போதுள்ள பொருளாதார நிலையில், லாபத்தை ‘புக்’ செய்வதே நல்லது’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தது கிரெடிட் சூஸ் நிறுவனம்.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது, உலகளாவிய வர்த்தகப் போர் போன்ற மேக்ரோ அபாயங்களால் இந்தியப் பங்குச் சந்தைகள் சமீப காலமாக அதிக ஏற்ற இறக்கம்  கண்டுவருகின்றன.

இந்த நிலையில், முதலீடு செய்ய ஏற்ற நேரமா என்கிற கேள்வி பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்தக் கேள்வியைப் பங்குச் சந்தையின் இரண்டு நிபுணர்களிடம் கேட்டோம். முதலில், பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick