ஷேர்லக்: தொடர் இறக்கத்தில் சந்தை... உஷார்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: தொடர் இறக்கத்தில் சந்தை... உஷார்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக் கேட்டுக்கொண்டபடி காலையிலேயே நாம் கேள்விகளை மெயில் அனுப்பி வைத்தோம். சரியாக மாலை 4 மணிக்கு அவர் பதில்களை அனுப்பினார். இனி நம் கேள்விகளும், ஷேர்லக்கின் பதில்களும்...

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் பங்கு விலை வெள்ளிக் கிழமை ஒரே நாளில் 60% வீழ்ச்சி கண்டுள்ளதே?

“இந்த நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே 60% வரை இறக்கம் கண்டு, அதன் 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.246-க்கு இறக்கம் கண்டது. வர்த்தக முடிவில் 43% விலை இறக்கத்துடன் அதாவது, ரூ.260 இறக்கம் கண்டு ரூ.350-ல் நிலை பெற்றது. இந்த நிறுவனம்,  முதலீட்டாளர்களுக்குத் திரும்ப அளிக்கவேண்டிய தொகையைக் கொடுக்கவில்லை எனத் தகவல் பரவியதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை  அதிரடியாகக் குறைந்தது.  தங்கள் கைவசம் தாராளமாக நிதி இருப்பதாகவும், யாருக்கும் பணம் தருவதில்  சிக்கல் இல்லை என இதன் சேர்மன் கபில் வாதவன் சொன்னபிறகும், பங்கு விலை இறங்குவது  நிற்கவில்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick