அமெரிக்க வட்டிவிகித முடிவு மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரி... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

அமெரிக்க வட்டிவிகித முடிவு மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரி... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வந்துவிடக்கூடும் என்றும், 11450-க்கு மேலேயே தொடர்ந்து இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங் நடந்தால் 11600/11690 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும், இறக்கம் வந்தால் நல்லதொரு சப்போர்ட் 11365/11260/11030 போன்ற லெவல்களிலேயே கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம். 10866 மற்றும் 11464 என்ற எல்லையைத்தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 372 புள்ளிகள் இறக்கத்தைச் சந்தித்து முடிவடைந்தது.

வெள்ளியன்று திடீரென வேகமான இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி 10866 வரை சென்று திரும்பியது. 11000 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் இறங்கினால் நல்லதொரு இறக்கம் மீண்டும் வந்துவிடக்கூடும். செப்டம்பர் எஃப் & ஓ எக்ஸ்பைரி வாரத்தில் நுழைய இருக்கிறோம். எக்ஸ்பைரிக்கு  உண்டான மூவ்களும் அமெரிக்க வட்டிவிகித முடிவுகளின் மீதான எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கும் மூவ்களுமே சந்தையில் இருக்கும் என்பதால் அனைத்துவிதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதை வரும் வாரத்தில் தவிர்ப்பதே நல்லது எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick