பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

இண்டெக்ஸ்

இந்த வாரத்தில்  இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்துடனேயே முடிவடைந்தபோதிலும், வெள்ளிக்கிழமையன்று லேசான முன்னேற்றம் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், வாரத்தின் மற்ற வர்த்தக தினங்களில் ஏற்பட்ட சரிவினால் உண்டான பாதிப்பு, சந்தையின் போக்கை ஒருவித அழுத்தத்திலேயே வைத்துள்ளதுடன், தொடர்ந்து மூன்று வாரங்களாக இண்டெக்ஸ் சரிவடைந்துள்ளது. இது, குறியீடுகளின்  குறுகிய கால போக்குகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது. வெள்ளிக்கிழமையன்று யெஸ் பேங்க் ஏற்படுத்திய சரிவுப் பாதையுடன் பயணித்த பேங்க் நிஃப்டி, நிஃப்டியைவிட மோசமாகச் செயல்பட்டதுடன், நிஃப்டிமீது பெரிய அழுத்தத்தைக்கூட ஏற்படுத்தியது.

குறியீடுகள் மீண்டும் ஏற்றமடைவதற்காக சில செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.  அதுவரைக்கும், இந்தச் சரிவு நிலை தொடர்ந்து நீடிக்கலாம் என்றே தெரிகிறது.

ஆப்ஷன் சந்தைகூட  இந்தப் பலவீனமான அம்சத்தில் சிக்கிக்கொண்டதாகக் காணப்பட்ட நிலையில், டிரேடர்கள் புட் ஆப்ஷன்களைக் கொண்டிருந்தபோதிலும்  கால் ஆப்ஷன்களை வேகமாக விற்றனர். இவையெல்லாம் நிஃப்டியை, தொடர்ந்து 11000 புள்ளிகளில் வைத்திருக்கிறது. மறுபுறம், கால் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் 12000 லெவலிலிருந்து சுமார் 11500 லெவலுக்கு அருகே அல்லது அதற்கும் கீழே படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆப்ஷன் டிரேடர்கள் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களது பொசிஷன்கள், சந்தையின் போக்கை மாற்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick