நிதிச் சுதந்திரத்தை அடைய 8 தாரக மந்திரங்கள்! | Eight Step Formula to achieve Financial Freedom - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

நிதிச் சுதந்திரத்தை அடைய 8 தாரக மந்திரங்கள்!

நா.சரவணகுமார், நிதி ஆலோசகர்

ளியமுறை வாழ்க்கையோ அல்லது நாம் விரும்பிய வாழ்க்கை முறையோ, எதுவென்றாலும் நாம் பொருளாதாரத்தைச் சார்ந்தே இருக்கிறோம். சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த பணத்தை சந்தோஷமாகச் செலவழிப்பதற்கான காலம் இருந்தால் மட்டுமே, நாம் சேர்த்த பணத்திற்கான பயன் உண்டு. நிதிச் சுதந்திரம் அல்லது பொருளாதாரச் சுதந்திரம் (Financial Freedom) என்பது நாம் நமக்கான தேவைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்காமல்,  போதுமான செல்வத்தை முன்கூட்டியே சேர்த்து வைத்துக்கொள்வதுதான். இதன் மூலம் நமது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகச் செயல்படலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க