பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்! | PF Pension will increase - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

`வருங்கால வைப்பு நிதித் திட்டத் தின்கீழ் (EPFO) வரும் அனைத்து ஊழியர்களும் பென்ஷன் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்ற கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதியத்தொகையை வருங்கால வைப்புநிதி ஆணையம்  கணக்கிட்டால், அது பலமடங்கு உயரும். இதனால் அரசு ஊழியர்களைப்போல, தனியார் ஊழியர்களும் பல ஆயிரம் ரூபாயை பென்ஷனாக பெறும் நிலை உருவாகும்.