ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்... கூடுதல் லாபத்துக்கு வழி! | Small Finance Banks Fixed Deposit Rates way to more profit - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்... கூடுதல் லாபத்துக்கு வழி!

சஞ்சய் கோவ், முதன்மை வணிக அதிகாரி, உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

வ்வோர் இந்தியரும் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதும் முதலீட்டுத் தேர்வாக, வங்கி  எஃப்.டி உள்ளது. இது முதலீட்டாளர் களுக்குக் குறிப்பிட்ட வருமானத்தை உறுதி செய்கிறது. முக்கியமாக, பங்குச் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளால் எஃப்.டி-க்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால், இது மிகக் குறைவாக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர் களுக்கு ஏற்றதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வைப்பு நிதியைவிடக் கூடுதல் வருமானத்தைத் தர வாய்ப்பு உள்ள பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளால், வைப்புநிதி அதன் ஈர்ப்பை இழந்துவிட்டது.