பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த மூன்று வாரங்களாகவே இண்டெக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், முடிவெடுக்க முடியாத கேண்டில் ஸ்டிக்கை நாம் கொண்டிருந்தபோதிலும், அதற்கு அடுத்த வாரத்தில் சந்தை வலுவான உந்துதலுடன் ஏற்றமடைந்து அதை ஒன்றுமில்லாததாக்கி விட்டது. ஆனாலும், கடந்த வாரத்தில், நிஃப்டியில் இதுவரை இல்லாத ஒரு புதிய உச்சம் ஏற்பட்டது. ஆனாலும், வாராந்திர கேண்டில் சார்ட் இன்னமும் தீர்மானிக்க முடியாத வகையிலேயே முடிவுற்றது.