கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் பிப்ரவரி 2019-லிருந்து இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கமானது, ஏற்றத்தின் இறக்கமாக 32680 என்ற புள்ளியைத் தொட்டு ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் வலுவானதாக இருந்தாலும், முந்தைய உச்சமான 33900 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டு, ஒரு டபுள்டாப் அமைப்பை உருவாக்கியது. அதன்பின் 32680 என்ற எல்லையை உடைத்த பிறகு, தங்கம் டவுன் டிரெண்டுக்கு மாறியதை நிரூபித்தது. இந்த டவுன் டிரெண்ட், தற்போது பக்கவாட்டு நகர்வாக மாறியுள்ளது.

முந்தைய வாரம் சொன்னது… “தங்கம் தற்போது 31640 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 32150 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது. தொடர்ந்து பல நாள்களாக இந்த எல்லைக்குள் இருப்பதால், எந்த பக்கம் உடைத்தாலும் வலுவாக நகர வாய்ப்புள்ளது.”

தங்கம் நாம் கொடுத்திருந்த ஆதரவான 31640-ஐ உடைத்து இறங்கி குறைந்தபட்சப் புள்ளியாக 31318-ஐ தொட்டது. பிறகு  மெள்ள ஏறுவதும், தொடர்ந்து ஏற முடியாமல்  சறுக்குவதும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 32150 என்ற தடை நிலையை சற்று தாண்டினாலும், 32260 என்ற எல்லை வரை சென்று மீண்டும் கீழ்நோக்கியே திரும்பியுள்ளது. அடுத்தமுறை தங்கம் மேல் நோக்கி நகர்ந்தால், அது தலைகீழ் ஹெட் அண்டு ஷோல்டராக மாறலாம்.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் தொடர்ந்து பக்கவாட்டு நகர்வில் உள்ள நிலையில், கீழே 31430-ஐ உடனடி ஆதர வாகவும், மேலே 31980 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.