கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri Commodity - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், கடந்த இரண்டு மாதங்களாக, 1750 என்ற தடைநிலையைத் தாண்ட முடியாமல், இறங்க ஆரம்பித்துள்ளது.   28.02.219 அன்று மென்தா ஆயில் மிக வலிமையான ஏற்றத்திற்கு முயன்று, 1748 வரை சென்று, பின் இறங்க ஆரம்பித்தது. அடுத்து 29.03.2019 அன்று மீண்டும் ஒரு வலிமையான ஏற்றத்திற்கு முயன்று,  1,737 என்ற எல்லையைத் தொட்டு பின் இறங்க ஆரம்பித்தது. இந்த இரண்டு முயற்சியிலும் 1595 என்ற எல்லை முக்கிய ஆதரவாகச் செயல்பட்டது. இந்த முக்கிய ஆதரவு 02.04.2019 அன்று உடைக்கப்பட்டது.   அதன்பின் வலிமையான தொடர் இறக்கத்தில் உள்ளது. 

முந்தைய வாரம் சொன்னது… “மென்தா ஆயில், அப்டிரெண்ட் முடிவுக்கு வந்து கீழே திரும்பிய நிலையில், முதல்கட்ட ஆதரவு என்பது 1595 என்ற எல்லையில் உள்ளது. மேலே 1650 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.”

மென்தா ஆயில் முந்தை வாரங்களில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1595-ஐ உடைத்து, வலிமையான இறக்கத்திற்கு வழிவகுத்தது.    நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1650-ஐ உடைக்க முடியாமல் கீழே திரும்பியதால், இறக்கம் இன்னும் வலிமையாக மாறியுள்ளது.  01.04.2019-ல் தொடங்கிய இறக்கம், அதாவது    1595-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்து, 10.4.19 வரை தொடர்ந்து இறங்கி குறைந்தபட்ச புள்ளியாக 1446-ஐ தொட்டுள்ளது. 

இனி என்ன செய்யலாம்..?

மென்தா ஆயில் வலிமையாக இறங்கிய நிலையில் ஒரு புல்பேக் ரேலி வரலாம். இதன் ஆதரவு எல்லை  1445 ஆகும்.  மேலே 1510 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.