மியூச்சுவல் ஃபண்ட் முதிர்வுத் தொகை சிக்கல்... என்ன காரணம்? | Maturity amount issue of Mutual Fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

மியூச்சுவல் ஃபண்ட் முதிர்வுத் தொகை சிக்கல்... என்ன காரணம்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கொஞ்சம் கலங்கித்தான் போயிருக் கிறார்கள். காரணம், இரண்டு ஃபண்ட் நிறுவனங்களிலிருந்து எஃப்.எம்.பி (FMP – Fixed Maturity Plan) குறித்து வந்த அதிர்ச்சி செய்திகள்தான்.
எஃப்.எம்.பி என்பவை கடன் சார்ந்த ஃபண்டுகளாகும். இவை குளோஸ் எண்டட் திட்டங்களாகும். கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கோட்டக் எஃப்.எம்.பி சீரிஸ் 127 என்கிற திட்டம் ஏப்ரல் 08-ம் தேதி முதிர்வடைந்தது. அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எஃப்.எம்.பி-ஆன ஹெச்.டி.எஃப்.சி எஃப்.எம்.பி 1168D பிப்ரவரி 2016 என்ற திட்டம் 2019 ஏப்ரல் 15-ல் முடிவடைகிறது.

கோட்டக் நிறுவனம் முதலீட்டின் முதிர்வுத் தொகையை முழுவதுமாக முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கவில்லை. அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் முதிர்வடையும் திட்டத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்திருக்கிறது.

இவை இரண்டிற்கும் காரணம் ஒன்றுதான்.  இந்த இரு நிறுவனங்களும் ஜீ-டிவி புரமோட்டர் நடத்தும் லிஸ்ட் செய்யப்படாத பிரைவேட் நிறுவனங்களுக்குக் கடன் தந்துள்ளன. அந்தக் கடன் பணம் திரும்ப வருவதில் சற்று இழுபறியாக உள்ளது. இந்தப் பிரச்னை சில மாதங்கள் முன்பே வெளிவந்துவிட்டது என்றாலும், இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

ஜீ-டிவியிடம் மாட்டிய கோட்டக்

ஐ.எல் அண்டு எஃப்.எஸ் என்ற நிறுவனம்    எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி, ஹெச்.டி.எஃப்.சி லிட் போன்ற நிறுவனங்களால் புரமோட் செய்யப்பட்ட நிறுவனம். இது பல்லாயிரக்கணக்கில் கடன் வாங்கி, பிற்பாடு வட்டி செலுத்த முடியாத நிலையை அடைந்தது. ஆதலால் நம் நாட்டின் கடன் சந்தையில் பெரிய அடி விழுந்தது. இதையொட்டி திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களிலும் பிரச்னை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜீ (ESSEL) குழுமத்திலும் பிரச்னை ஏற்பட்டது.

எஸ்ஸெல் குழுமத்தின் சேர்மன் சுபாஷ் சந்திரா ஆவார். இவர் ஜீ டிவி, எஸ்ஸெல் புரோபேக் போன்ற லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்கள் தவிர, பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்படாத நிறுவனங்களான எடிசன் யுட்டிலிட்டி வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், கோண்டி இன்ஃப்ரா பவர் அண்டு மல்டி வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்குக் கடன் வாங்கும்போது, தனது ஜீ டிவி நிறுவனத்தின் பங்குகளை அடமானமாகத் தந்திருந்தார். அவ்வாறு இருக்கும்போது, உரிய தேதியில் அசல்/ வட்டி வராவிட்டால், கடன் கொடுத்த நிறுவனம் அடமானமாகப் பெற்ற பங்குகளை விற்பதற்கு உரிமை உண்டு.

அந்த அடிப்படையில், கடந்த ஜனவரியில் ஒரு சில நிறுவனங்கள் ஜீ டிவி மற்றும் டிஷ் டிவியின் பங்குகளைச் சந்தையில் விற்க ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து உடனடியாக இந்த நிறுவனங்களின் பங்குகள் வெகுவேகமாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க