கிரெடிட் கார்டு... சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? - ஒரு செக் லிஸ்ட் | Credit Card Awareness - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

கிரெடிட் கார்டு... சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? - ஒரு செக் லிஸ்ட்

ந்தியாவில் கிரெடிட் கார்டு  பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை, ஜனவரி, 2019 நிலவரப்படி 4.51 கோடி யாக அதிகரித்திருக்கிறது என ஆர்.பி.ஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.06 கோடி அதிகம். வருகிற 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் இதன் எண்ணிக்கை 10 கோடியைத் தொடும் என வங்கி ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

கிரெடிட் கார்டின் பயன்பாடு இப்படித் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், அதனைப் பற்றி மக்கள் எந்த அளவுக்கு சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. நீங்கள் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா என்று  பாருங்கள். இதன்மூலம் கிரெடிட் கார்டினை பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியும்.