புதிய சட்ட முன்வடிவு... நகைச்சீட்டு நடத்த தடை வருமா? | New Bill about Gold Fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

புதிய சட்ட முன்வடிவு... நகைச்சீட்டு நடத்த தடை வருமா?

நிறுவனங்களால் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முறைப்படுத்தப்படாத டெபாசிட்டுகளைத் தடை செய்வதற்கான சட்ட முன்வடிவுக்கு, 2019 பிப்ரவரியில் மத்திய கேபினெட் அமைச்சகம் ஒப்புதல் கொடுத்தது. ``இதன்மூலம், ஏழ்மையில் உள்ள பொதுமக்களை ஏமாற்றி டெபாசிட்டுகளைப் பெறும் நிறுவனங்கள் ஒழிக்கப்படும்’’ என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். முறைகேடாக டெபாசிட்டுகளைப் பெறும் நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை தருவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று அப்போது கடுமையாக எச்சரிக்கப்பட்டது.