ப்ளாக்செயின்... பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பம்! | Blockchain Technology - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

ப்ளாக்செயின்... பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பம்!

ப்ளாக்செயின் - இன்றைக்கு உலகத்தையே வியக்க வைத்துக்கொண்டிருக்கும் தொழில் நுட்பம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பிட்காயினில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக, ப்ளாக்செயின் என்கிற தொழில்நுட்பத்தை மக்கள் சந்தேகத்துடன் பார்த்துவருகின்றனர். உண்மையில் ப்ளாக் செயின் என்றால் என்ன, இந்தத் தொழில் நுட்பம் என்ன மாதிரியான விளைவுகளை இனிவரும் சமுதாயத்தில் ஏற்படுத்தும், இதனால் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லும் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது.

இந்தக் கலந்துரையாடலை சென்னை இன்டர்நேஷனல் சென்டர் (CIC) என்னும் அமைப்பு, கோட்டூர்புரத்தில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ல் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலைச் சிறப்பாக நடத்தித் தந்தார் கேம்ஸ் (CAMS) நிறுவனத்தின் நிறுவனரான வி.சங்கர். சர்வதேச ஆடிட்டிங் நிறுவனமான எர்னஸ்ட் மற்றும் யெங் நிறுவனத்தின் பார்டனரும் அதன் இன்னோ வேஷன் சென்டர் தலைவருமான டெர்ரி தாமஸும், நிஷித் தேசாய் நிறுவனத்தின் இம்பாக்ட் இன்வெஸ்ட்மென்ட் அண்டு சோஷியல் ஃபைனான்ஸ் பிரிவின் தலைவருமான மெய்ய நாகப்பனும் (இவர் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனின் மூத்த மகன்) இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசினர்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடங்கி வைத்துப் பேசும்போதே, ப்ளாக்செயின் தொழில் நுட்பத்துக்கும் பிட்காயினுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்  ‘கேம்ஸ்’ சங்கர்.