வரிக் கணக்கு தாக்கல் படிவங்கள்... என்னென்ன மாற்றங்கள்? | Amendment of ITR filing forms - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

வரிக் கணக்கு தாக்கல் படிவங்கள்... என்னென்ன மாற்றங்கள்?

முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டு வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட் டுள்ளன. வரிதாரர் குறித்துப் பல தகவல்கள் புதிதாகக் கேட்கப்பட்டுள்ளன. எனவே, வழக்கம்போல வருமான வரித் தாக்கல் செய்தவர்களும், இனி செய்ய இருப்பவர்களும் கூடுதல் விவரங்களைத் திரட்டி வருமான வரித் தாக்கல் செய்யவேண்டியிருக்கிறது.

தற்போது வந்திருக்கும் மாற்றங்களின்படி, குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்ய வேண்டிய வருமான வரித் தாக்கலில், அவர்கள் இந்தியாவில் எத்தனை நாள்கள் தங்கியிருந்தனர் என்கிற விவரங்களையும், பங்குச் சந்தையில் கிடைத்த வருமானத்துக் கான வரித் தாக்கலைச் செய்பவர்களிடம்  பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் (Unlisted shares) முதலீடு செய்திருந்தால்,  அது குறித்த விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

வருமான வரித் தாக்கல் படிவங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து சென்னையின் பிரபல ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.