மாறும் தொழில்நுட்பம்... பிசினஸ்மேன்கள் சந்திக்கவேண்டிய சவால்கள்! | Challenges to Businessmen about Technological disruption - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

மாறும் தொழில்நுட்பம்... பிசினஸ்மேன்கள் சந்திக்கவேண்டிய சவால்கள்!

ண்டுக்கு ஆண்டு அல்ல, மாதத்துக்கு மாதம், வாரத்துக்கு வாரம் பலவிதமான மாற்றங்களைக் கண்டுவருகின்றன தொழில்நுட்பங்கள்   (Technological disruption). இதனால்  தொழில் நிறுவனங்களை நடத்திவரும் தலைவர்கள் தினந்தோறும் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சவால்களை எப்படிச் சந்திப்பது, இந்தச் சவால்களை வெற்றிகொள்ள நம்முடைய அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், இது தொடர்பாக உலக அளவில் பெரும் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பது குறித்து, கடந்த வாரம் சென்னையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துச் சொன்னார் இந்தியாவின் மிகப் பிரபலமான மேலாண்மைக் கல்வி நிறுவனமான இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) பேராசிரியர் துரைசாமி நந்தகிஷோர். இவர் நெஸ்லே நிறுவனத்தில் பல  ஆண்டுக்காலம் பணியாற்றி அதன் செயல்  நிர்வாக இயக்குநராக இருந்தவர். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதன் சுருக்கம் இதோ...