இந்தியாபுல்ஸ் - லக்ஷ்மி விலாஸ் பேங்க் இணைப்பு... ரிசர்வ் வங்கி அங்கீகரிக்குமா..? | Lakshmi Vilas Bank and Indiabulls merger issue - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

இந்தியாபுல்ஸ் - லக்ஷ்மி விலாஸ் பேங்க் இணைப்பு... ரிசர்வ் வங்கி அங்கீகரிக்குமா..?

ஆர்.மோகனப் பிரபு CFA

சில மாதங்களுக்குமுன், கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிதி நிறுவனம், தொழில் முதலீட்டு வங்கியான ஐ.டி.எஃப்.சி பேங்குடன் இணைந்தது. இதன்பிறகு, பந்தன் வங்கியுடன் க்ருஹ் ஃபைனான்ஸ் நிறுவனம் கைகோத்தது. இதற்குப்பிறகு, பாரத் ஃபைனான்ஷியல் இன்க்ளுஷன் நிறுவனம், இண்ட்ஸ் இந்த் வங்கியுடன் இணைந்தது. இந்த வரிசையில், தற்போது இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் லக்ஷ்மி விலாஸ் பேங்க் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளது.

சமீபத்திய வங்கிசாரா நிதி நிறுவன நிதி நெருக்கடியின்போது, பலரது சந்தேகக் கணைகளுக்கு ஆளான இந்தியாபுல்ஸ் நிறுவனம், ஒரு வங்கியாக மாற ஏற்கெனவே செய்த முயற்சி (2014) ரிசர்வ் வங்கியினால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தற்போது, லக்ஷ்மி விலாஸ் பேங்க்குடன் இணைவதன் மூலம் புதிய வங்கியாக உருவெடுக்க இந்தியாபுல்ஸ் நிறுவனம் செய்துள்ள நூதன முயற்சியானது உண்மையில் பலிக்குமா அல்லது ரிசர்வ் வங்கி  மீண்டுமொரு முறை அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்று பார்ப்போம்.

   பங்குப் பரிவர்த்தனைத் திட்டம்

05.04.2019 அன்று லக்ஷ்மி விலாஸ் வங்கி மற்றும் இந்தியாபுல்ஸ் நிர்வாகக் குழு கூட்டங்களில் முன்மொழியப் பட்ட இணைப்புத் திட்டத்தின்கீழ், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் 100 பங்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு 14 இந்தியாபுல்ஸ் பங்குகள் வழங்கப்படும்.

இந்த இணைப்பின்மூலம் உருவாகும் புதிய வங்கியின் நிகர மூலதனம் ரூ.19,472 கோடி. கடன் சொத்துகள்     ரூ.1,23,393 கோடி. மூலதன விகிதம் (Capital Adequacy Ratio) 20.6%. இந்த இணைப்பின்மூலம் உருவாகும் புதிய வங்கி, தன்வசமிருக்கும் சொத்துகளின் அடிப்படையில் இந்தியாவின் எட்டாவது பெரிய தனியார் வங்கியாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க