பலே பவிஷ் அகர்வால்... 7,700 கோடி முதலீட்டை ஏன் வாங்க மறுத்தது ஓலா? | Ola founder Bhavish Aggarwal turned down a SoftBank deal - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

பலே பவிஷ் அகர்வால்... 7,700 கோடி முதலீட்டை ஏன் வாங்க மறுத்தது ஓலா?

வாசு கார்த்தி

ஸ்டார்ட் அப் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிறுவனம் பரபரப்பாகப் பேசப்படும். ஃப்ளிப்கார்ட், அமேசான், பே டிஎம் நிறுவனங்கள் கடந்த காலத்தில் பேசப் பட்டதுபோல், இப்போது ஓலா நிறுவனம் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருக் கிறார்கள். ஏன்?

சாஃப்ட்பேங்க் நிறுவனம் 100 கோடி டாலர் முதலீடு செய்ய முன்வந்தும், ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் அந்த முதலீட்டை மறுத்துவிட்டார் என்கிற தகவல் வெளியானதுதான் இந்த பரபரப்புக்கு முக்கியக் காரணம். முதலீடு கிடைக்காதா எனப் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஒருபக்கம் ஏங்கிக் கொண்டிருக்க, தன்னைத் தேடிவந்த  1.1 பில்லியன் டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,700 கோடி) முதலீட்டை வேண்டாம் என்று பவிஷ் அகர்வால் மறுக்க என்ன காரணம்?

   சாஃப்ட்பேங்க் முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனம் சாஃப்ட்பேங்க். மயோஷி சன் (Masayoshi Son) என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் வசம் அதிகளவு கையிருப்பு உள்ளது. ஆனால், முதலீடு செய்வதற்கு ஜப்பானில் போதுமான அளவுக்கு நிறுவனங்கள் இல்லை. அதனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இந்த  நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முக்கியமான ஸ்டார்டஅப் நிறுவனங்கள்  எதுவானாலும் அதில் சாஃப்ட்பேங்க் முதலீடு செய்தது. ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், குரோபர்ஸ், பே டிஎம், ஓயோ, ஓலா, ஊபர், டெல்லிவரி உள்ளிட்ட பல நிறுவனங்களில் சாஃப்ட்பேங்க் முதலீடு செய்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க