ஷேர்லக்: லாபத்தில் ஐ.டி நிறுவனங்கள்! | Shareluck - IT companies in profit - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

ஷேர்லக்: லாபத்தில் ஐ.டி நிறுவனங்கள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக், “அவசரவேலையாக மும்பை வந்துவிட்டேன், கேள்விகளை அனுப்புங்கள்” எனக் காலையிலேயே வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினார். நாம் கேள்விகளை அனுப்ப, சரியாக மாலை ஆறு மணிக்குப் பதில்களை மெயில் அனுப்பிவைத்தார். இனி நம் கேள்விகளும், அவரது பதில்களும்...

இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் நிறுவனங்கள் நல்ல லாபம் கண்டுள்ளனவே?

‘‘ஐ.டி துறையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவு  வெளியாகியிருக்கிறது. கடந்த 2018-19-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 10.5% அதிகரித்து, ரூ.4,078 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,690 கோடியாக இருந்தது.

நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 7.5-9.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஏற்கெனவே ரூ.7 இடைக்கால டிவிடெண்டாக அளித்த இந்த நிறுவனம், தற்போது ரூ.10.50 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

கடந்த 2018-19-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு நிலவரப்படி, டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17.7% அதிகரித்து, ரூ.8,126 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.6,904 கோடியாக இருந்தது. கடந்த நிதி யாண்டில் இந்த  நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 21.9% அதிகரித்து, ரூ.31,472 கோடியாக இருக்கிறது. டி.சி.எஸ் முதலீட்டாளர்களுக்கு இறுதி டிவிடெண்ட்டாக பங்கு ஒன்றிற்கு ரூ.18 வழங்க அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க