கம்பெனி டிராக்கிங்: அமரராஜா பேட்டரீஸ்! (NSE SYMBOL: AMARAJABAT) | Company Tracking - Amara Raja Batteries Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

கம்பெனி டிராக்கிங்: அமரராஜா பேட்டரீஸ்! (NSE SYMBOL: AMARAJABAT)

மரராஜா பேட்டரீஸ் லிமிடெட் 1985-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டு, 1991-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம்.

  நிறுவனத்தின் வளர்ச்சி

1989-ல்  ஜி.என்.பி பேட்டரீஸ் இங்க் எனும் நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொண்ட இந்த நிறுவனம், 1990-ல்  வி.ஆர்.எல்.ஏ (valve-regulated lead-acid)  என்னும் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பின்னர், 1991 மார்ச்சில்  முதன்முதலாக பொதுப் பங்குகளை வெளியிட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. அதே ஆண்டில் செப்டம்பரில்  டெலிகாம் துறையில் உபயோகப்படுத்தப்படும் பேட்டரிகளில் வி.ஆர்.எல்.ஏ தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

1993-ல்  இந்திய ரயில்வே நிறுவனத்திற்கான பேட்டரிகளை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், 1995-ல் தன்னுடைய பேட்டரி தயாரிப்புகளை முதன்முதலாக ஏற்றுமதி செய்தது.  பின்னர், 1996-ல் ரயில்வே துறையில் ரயில் பெட்டிகளில் பொருத்தப்படும் பேட்டரிகளில் வி.ஆர்.எல்.ஏ தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது அமரராஜா பேட்டரீஸ்.

1997-ல் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் இங்க் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆட்டோமொபைல்களுக்கான தயாரிப்பில் கால்பதித்தது இந்த நிறுவனம். இந்தத் தொழில்நுட்பக் கூட்டணியுடன் இணைந்து பேட்டரிகளை 1998-ல் உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு முதலில் சப்ளை செய்ய ஆரம்பித்தது.

பின்னர் 2000-ல் அமரன் ஆட்டோமோட்டிவ் பேட்டரீஸ் என்ற பிராண்டில், சந்தையில் ஆட்டோமொபைல்களுக்கான பேட்டரிகளை அறிமுகப்படுத்தியது. 2001-ல் ஆட்டொமொபைல் களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்யும் தனி உற்பத்தி வசதியை ஆரம்பித்த இந்த நிறுவனம், 2002-ல் குவான்ட்டா என்ற பெயரில் தன்னுடைய இண்டஸ்ட்ரீயல் பேட்டரி டிவிஷன் வாயிலாக யு.பி.எஸ் பேட்டரிகளை அறிமுகப்படுத்தியது.  அதே வருடத்தில் அமரன் ஹைவே மற்றும் அமரன் ஹார்வெஸ்ட் என்ற இரண்டு வகை பேட்டரிகளை அறிமுகப்படுத்தியது.