பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் இரண்டு விஷயங்களை முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தோம். ஒன்று, நிஃப்டியால் புதிய உச்சங்களைத் தொட முடியும் என்பது. இரண்டாவது, வங்கிப் பங்கு களால் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்ற முடியுமா என்பது. இதில், நாம் முதலில் சொன்னது நடந்துவிட்டது. ஆனால், இரண்டாவ தாகச் சொன்னது நடக்கவில்லை. ஆதலால், அது சற்று மாறுபட்ட சூழலை உருவாக்கியுள்ளது.

நிஃப்டி புதிய உச்சங்களுக்கு நகர்ந்து, வங்கிப் பங்குகள் பலவீனமடைவதற்கு முன்னதாகவே ஃப்யூச்சர்ஸில் 11834 புள்ளிகளைத் தொட்டதுடன்,  வார இறுதியில் அதைக் கீழே இழுத்துக்கொண்டு வரவும் செய்தது. ஆகவே, வங்கிகளே கொடுத்து, பின்னர் அதுவே திரும்ப எடுத்துக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

நிஃப்டியின் உச்சத்துக்கு (ஏப்ரல் 3) மிகவும் முன்னதாகவே (மார்ச் 24) பேங்க் நிஃப்டி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருந்தது. அந்த உச்சத்தில் இருந்து 1200 புள்ளிகளுக்கு அதைக் கீழே இறங்கி உள்ளதை இப்போது நாம் காண்கிறோம். ஒரு வலுவான நிலையை ஏற்படுத்தியபின், கணிசமான ஓர் இறக்கத்தில் அது தற்போது இருப்பதால், அங்கே பங்குகளை விற்று லாபம் பார்க்கும் ஒரு தீவிரமான போக்கு உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும், நிஃப்டி மற்றும் பேங்க் நிப்ஃடி ஆகிய இரண்டிலுமே ஏற்பட்ட சரிவு 38% ரீட்ரேஸ்மென்ட் லெவலில் மட்டுமே இருந்ததால், கடந்த ஆறு வாரங்களாகக் கணிசமான லாபங்கள் இருந்தன.