நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை வந்துபோகலாம்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை வந்துபோகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தில் நுழைய இருக்கிறோம். 11540 மற்றும் 11700 என்ற லெவல்களுக்குள் கட்டுப்பட்டு இருப்பதைப் போன்ற டெக்னிக்கல் சூழலே சந்தையில் இருக்கிறது.

11740 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங் வந்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளதைப் போன்ற டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது. இறக்கம் வந்தால், 11500 லெவலிலேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பாசிட்டிவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் எனலாம். மூன்றே டிரேடிங் தினங்கள் இருப்பதால், டைரக்‌ஷன்லெஸ் நிலைமை தோன்ற வாய்ப்பிருப்பதால், வியாபாரத்தின் அளவினைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு வியாபாரம் செய்வதே அனைத்துவிதமான டிரேடர்களுக்கும் சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். அதிக கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டிய காலகட்டம் இது.